காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைப்பேரிடர் அபாயங்களின் தாக்கங்களிலிருந்து கம்பளை நகரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் செயல்படத் தயாராக இருக்கும் இளைஞர் குழுவாக நீங்கள் இருந்தால், இது உங்களுக்கான அரிய வாய்ப்பாகும்.
சர்வதேச Bloomberg Philanthropies அமைப்பின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் Youth Climate Action Fund (YCAF) திட்டம், உங்கள் புதுமையான மற்றும் தொலைநோக்குப்பார்வையுடைய எண்ணங்களை நடைமுறைச் செயல்களாக மாற்றுவதற்கான நிதி உதவிகளை (Grant Funding) வழங்குகிறது. எமது கம்பளை நகரத்தைப் பாதுகாக்கும் முன்னோடி இளைஞர்களாக இணைந்து இந்த முயற்சியில் பங்கேற்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் தகவல்களுக்கு, கீழே வழங்கப்பட்டுள்ள ஆவணங்களையும் விண்ணப்பப் படிவத்தையும் பதிவிறக்கம் செய்து கவனமாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.