English| Tamil|Sinhala




கம்பாலாவின் வரலாறு

கம்பளையின் வரலாறு

பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நான்கு ஆண்டுகள் நாட்டை ஆண்ட நான்காம் புவனேகபாகு மன்னன் கம்பளையைத் தலைநகராக அமைத்துக்கொண்டார். கம்பளையின் கடைசி மன்னன் ஐந்தாம் புவனேகபாகு ஆவார். அவர் 29 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தார். இக்காலப்பகுதுயில் அழகக்கோனார் என்ற பிரபுவால் கோட்டை என்ற இடத்தில் தனி நகரம் கட்டப்பட்டது. தெற்காசியாவிலேயே மிக நீளமான சாய்ந்த புத்தர் சிலை கம்பளை சாலியலபுர விஹாரையில் அமைந்துள்ளது. கம்பளை நகரம் பழங்காலத்தில் கங்காசிறிபுர என்றும் அழைக்கப்பட்டது. கம்பளை இராச்சியத்தின் போது, பல இலக்கிய காவியங்கள் எழுதப்பட்டன, சிங்களத்தில் எழுதப்பட்ட முதல் இலக்கிய காவியமான மயுர சந்தேஷய எனும் காவியத்திற்கு முக்கிய இடம் உண்டு. மேலும் கம்பளை, வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களின் பட்டியலில், சேர்க்கப்பட்டுள்ள ஒரு நகரமாகும். எம்பக்க தேவாலயம், அம்பலம போன்ற கலைப் படைப்புகள் கம்பளை இராச்சியத்தின் போது கட்டப்பட்டவை. இளவரசர் அம்புலுகல ஒருகாலகட்டத்தில் அம்புலுவாவ மலையை மையமாகக வைத்து கம்பளையை ஆட்சி செய்தார்

கம்பளையின் வரலாற்று பின்னணி

கி.பி 1341 இல் கடமை நகரமாக மாறிய கம்பளை நகரம் மகாவலி ஆற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டதால் அதன் பெயர் வந்தது. கங்கா + ஸ்ரீ + புர = கங்காசிரிபுர என்றும், கங்கை + பலா = கம்பளை என்றும் புழக்கத்திற்கு வந்தது. நான்காம் புவனேகபாகு கம்பளை இராசதானியின் முதல் மன்னராவார். அவர் தனது அரண்மனையை கட்டிய பகுதியே இன்று சிங்கபிட்டி என அழைக்கப்படுகிறது. ஆனால் அப்போது அந்தப் பகுதி கொடகம என்று அழைக்கப்பட்டது. சிங்கள இலக்கிய காவியத்தின் முதல் இலக்கிய காவியம் மயுர சந்தேஷய எனும் காவியமாகும். அது கம்பளை இராசதானி சமயத்தில் வாழ்ந்த கவிஸ்வர என்ற கவிஞரால் எழுதப்பட்டது. இதில் கம்பளை அரண்மனையை பற்றிய துதியும் அடங்கும்.

கம்பளை இராச்சியம்

தொடக்கம் மற்றும் முடிவு தலைநகரம் பொதுமொழி
கி.பி 1345 – கி.பி 1406 கம்பளை சிங்களம்

கம்பளை இராச்சியம் மன்னர்கள் மற்றும் ஆட்சிகள்

மன்னர் ஆட்சிகாலம்
ஐந்தாம் பராக்கிரமபாகு • AD 1345-1359
மூன்றாம் விக்கிரமபாகு AD 1357–1373
ஐந்தாம் புவனேகபாகு AD 1373–1406