கம்பளை பொது நூலகத்தின் இரவல் கொடுத்தல் பிரிவு, ஆராய்வுப் பிரிவு, சிறுவர் பிரிவு, செய்தித்தாள் வாசிப்பு பிரிவு, ஆய்வுப் பிரிவு, புத்தகப் பிணைப்புப் பிரிவு, கணினி பிரிவு மற்றும் விழிப்புலனற்றவர்களுக்கான பிரிவு என, துறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் கிளை நூலகங்களாக கல்கெடியாவ பொது நூலகம், வாசிகசாலைகளாக, சிங்கபிட்டிய வாசிகசாலை, கஹடபிட்டிய வாசிகசாலை மற்றும் கீரப்பனை வாசிகசாலையும் நிறுவப்பட்டுள்ளன. இதனால் நூலகத்தை அணுக முடியாதவர்கள் அருகில் உள்ள இடத்திற்குச் சென்று செய்தித்தாள்களை படிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.